Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

India Post Recruitment 2022: 10 ஆம் வகுப்பு பாஸா..? இந்திய போஸ்ட் ஆபிஸில் வேலை ரெடி…! உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani June 14, 2022 & 17:55 [IST]
India Post Recruitment 2022: 10 ஆம் வகுப்பு பாஸா..? இந்திய போஸ்ட் ஆபிஸில் வேலை ரெடி…! உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

India Post Recruitment 2022: இந்திய போஸ்ட் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (India Post Recruitment 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தபால் துறை

பணியின் பெயர்

Staff Car Driver (Ordinary Grade) (General Central Service, Gr-C, and Non-Gazetted, Non-Ministerial)

காலிப்பணியிடங்கள்

24

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூன் 14, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 20, 2022

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Post Office Jobs 2022).

துறை

காலிப்பணியிடங்கள் (Post Office Vacancies 2022)

Staff Car Driver (Ordinary Grade) (General Central Service, Gr-C, and Non-Gazetted, Non-Ministerial)

24

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஊதியத் தொகையாக மாதம் ரூ. 19,900 (Level 2 in the Pay Matrix as per 7th CPC) வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதி அளவுகோல்களைப் பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.
  • மத்திய அரசின் மற்ற அமைச்சகங்கள் மற்றும் ஆயுதப் படை பணியாளர்கள்:
  • இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும், ஓட்டுநர் உரிமத்தை வைத்திருத்தல் அவசியம்.
  • விண்ணப்பதாரர்கள் மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவைப் பெற்றிருத்தல் வேண்டும். அதாவது, அவர்களால் வாகனத்தில் உள்ள சிறிய குறைபாடுகளையும் நீக்க முடியும் (Post Office Recruitment 2022).
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 3 வருடங்கள் இலகு மற்றும் கனரக மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் இறுதி தேதியின் படி, அதிகபட்ச வயது வரம்பாக 56 வயதைக் கொண்டிருக்கலாம். எனவே, விண்ணப்பதாரர்கள் அதற்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும் (Post Office Jobs 2022).

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் Deputation முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் (India Post Selection Process 2022). மேலும், மத்திய அரசின் அதே அல்லது வேறு சில துறைகளில் இந்த நியமனத்திற்கு முன்னதாக உடனடியாக நடத்தப்பட்ட மற்றொரு முன்னாள் பணியாளர் பதவியில் பிரதிநிதித்துவ காலம் உட்பட மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Post Office Recruitment Apply Link Online).

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் பின், அதில் உள்ள அறிவிப்பினைக் கண்டறிய வேண்டும்.
  • பிறகு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

மூத்த மேலாளர் (JAG),

அஞ்சல் மோட்டார் சேவை,

எண். 37,

கிரீம்ஸ் சாலை,

சென்னை - 600 006

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்