Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அக்னிபாத் ஆட்சேர்ப்பு.. வடமாவட்ட இளைஞர்களே தயாரா.. உடனே விண்ணப்பிங்க!!

Sekar August 10, 2022 & 09:56 [IST]
அக்னிபாத் ஆட்சேர்ப்பு.. வடமாவட்ட இளைஞர்களே தயாரா.. உடனே விண்ணப்பிங்க!!Representative Image.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் 11 வடமாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என இந்திய ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் பல எதிர்ப்புகள் கிளம்பினாலும், ராணுவத்தை மெருகேற்றவும், இந்திய இளைஞர்கள் ராணுவ பயிற்சியை பெறவும் மத்திய அரசு பாதுகாப்பு படைகளுடன் சேர்ந்து அக்னிபாத் திட்டத்தை உறுதியுடன் செயல்படுத்தி வருகிறது. 

இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி வழங்கப்பட்டு அதன் பின்னர் நாட்டிற்கு சேவையாற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். 17 முதல்  21 வயது வரையிலான இரு பாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், இந்திய ராணுவத்தின் சார்பில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்ய வேலூரில் வரும் நவம்பர் 15 முதல் 25 வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ராணுவம் பாதுகாப்புத் துரையின் சென்னை பிரிவு மக்கள் தொடர்பு அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இதன்படி வேலூரில் நடக்கும் இந்த முகாமில் வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

8 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது தகுதிக்கேற்ப அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம், ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 3-ம் தேதிக்குள் விருப்புள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 

இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், 044 2567 4924 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பாதுகாப்புத்துறை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்ட அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்