Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ.1,30,000-க்கும் அதிகமான சம்பளத்தில் டிஎன்பிஎஸ் வெளியிட்ட வேலைவாய்ப்பு!

Gowthami Subramani Updated:
மாதம் ரூ.1,30,000-க்கும் அதிகமான சம்பளத்தில் டிஎன்பிஎஸ் வெளியிட்ட வேலைவாய்ப்பு!Representative Image.

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் (மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு ஜனவரி 07, 2023 ஆம் நாள் வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

Junior Rehabilitation Officer (தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி)

காலிப்பணியிடங்கள்

07

அறிவிப்பு வெளியான நாள்

டிசம்பர் 09, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜனவரி 07, 2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Junior Rehabilitation Officer (தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி)

07

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Junior Rehabilitation Officer (தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி)

ரூ.35,600 முதல் ரூ.1,30,800

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

Psychology-ல் முதுகலை பட்டம் அல்லது Social work or Sociology-ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உளவியல் சோதனைகள் அல்லது மாற்றுத் திறனாளிகளின் வேலைவாய்ப்பை விளக்குவதில் குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூலை 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

ஆ.தி., ஆ.தி(அ), ப.ப., மி.பி.வ/சீ.ம., பி.வ., பி.வ.(மு) மற்றும் அலனத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள்

வயது வரம்பு இல்லை

ஏனையோர்கள்

37 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்கக் கூடாது

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி போன்றவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

இணையவழிச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.

 

கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்

துறை

வயது வரம்பு

தாள் – I: (பாடத்தாள்) (முதுகலைப்பட்டப்படிப்பு)

(முதுநிலைப் பட்டம் பெற்ற பாடத்தினை கீழ்க்காணும் பாடத்தான் ஒன்றினை தெரிவு செய்ய வேண்டும்)

  1. உளவியல் (பாடக்குறியீட்டு எண்.372)
  2. சமூகப்பணி (பாடக்குறியீட்டு எண்.370)
  3. சமூகவியல் (பாடக்குறியீட்டு எண்.368)

ஏப்ரல் 01, 2023

முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 12.30 வரை

தாள் – II:

பகுதி அ- கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (10 ஆம் வகுப்புத் தரம்)

பகுதி ஆ – பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்)

ஏப்ரல் 01, 2023

பிற்பகல் 2.30 முதல் பிற்பகல் 5.30 வரை

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்ட தகுதிகளைச் சரிபார்த்து பின் தகுதியுடையவர்கள், அதில் உள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்