Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Post Office Jobs 2022: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியா..? போஸ்ட் ஆபிஸ் வேலை..! 39,000 பணியிடங்கள்… பெண்களுக்கு கட்டணம் கிடையாது..!

Gowthami Subramani May 05, 2022 & 13:00 [IST]
Post Office Jobs 2022: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியா..? போஸ்ட் ஆபிஸ் வேலை..! 39,000 பணியிடங்கள்… பெண்களுக்கு கட்டணம் கிடையாது..!Representative Image.

Post Office Jobs 2022: இந்திய அஞ்சல் துறையில் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஊதிய விவரங்கள், விண்ணப்பிப்பதற்கான முறை போன்ற பல்வேறு தகவல்கள் இங்கேக் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய அஞ்சல் துறை

பணியின் பெயர்

கிளை போஸ்ட் மாஸ்டர், உதவிக்கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர்

காலிப்பணியிடங்கள்

38,926

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

மே 2, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 5, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

கிளை போஸ்ட் மாஸ்டர்

ரூ. 12,000

உதவிக்கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர்

ரூ. 10,000

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

  • குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இதில், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக உள்ளூர் மொழியறிவு கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பதும் கட்டாயமாகும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயதாக 18 ஆண்டுகளையும் அதிகபட்ச வயதாக 40 ஆண்டுகளையும் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், சில பிரிவினர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

பிரிவுகள்

வயது வரம்பு சலுகை

பட்டியல் சாதிகள்

5 ஆண்டுகள்

பட்டியல் பழங்குடியினர்

5 ஆண்டுகள்

இட ஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள்

3 ஆண்டுகள்

மாற்றுத் திறனாளிகள்

10 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களில் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மேலும், ஏனைய வகுப்பினர்கள் அனைவரும் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 100-ஐச் செலுத்த வேண்டும்.

அஞ்சல் கிளையின் மூலமாகவோ, வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம் போன்றவற்றால் விண்ணப்பக்கட்டணத்தைச் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவிட வேண்டும்.

மேலும், அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களான சாதிச் சான்றிதழ், கல்வித்தகுதி, மின்னஞ்சல், புகைப்படம், கையெழுத்து, தொலைபேசி எண் போன்றவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்திய அஞ்சல் துறையின் வேலைவாய்ப்பு குறித்த இன்னும் சில தகவல்களுக்கு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்