Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NHAI Jobs Online 2022: இந்த தகுதி இருந்தா போதும்…. மாதம் ரூ. 67,000 சம்பளத்தில் அருமையான வேலை….!

Gowthami Subramani May 25, 2022 & 10:35 [IST]
NHAI Jobs Online 2022: இந்த தகுதி இருந்தா போதும்…. மாதம் ரூ. 67,000 சம்பளத்தில் அருமையான வேலை….!Representative Image.

NHAI Jobs Online 2022: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2022 ஆம் ஆண்டின் தலைமை பொது மேலாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

பணியின் பெயர்

தலைமை பொது மேலாளர் (நிர்வாகம் மற்றும் மனித வளம்)

காலிப்பணியிடங்கள்

01

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஆன்லைன் முறை – 27-05-2022

ஆஃப்லைன் முறை – 13-06-2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் & ஆஃப்லைன்

நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (NHAI Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

தலைமை பொது மேலாளர் (நிர்வாகம் மற்றும் மனித வளம்)

01

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (NHAI Job Application 2022).

துறை

ஊதியத்தொகை / மாதம்

தலைமை பொது மேலாளர் (நிர்வாகம் மற்றும் மனித வளம்)

ரூ. 37,400 முதல் ரூ. 67,000 வரை (கிரேடு பே ரூ. 10,000 உடன்)

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (Latest NHAI Jobs).

  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • மேலும், விண்ணப்பதாரர்கள் நிர்வாகம் / மனிதவளம் / பணியாளர் மேலாண்மை பதவியில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதாக 56 ஆண்டுகளைக் கொண்டிருக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம்.
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் பின், அதில் குறிப்பிட்டுள்ள அறிவிப்பைச் சரிபார்த்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினைச் சரிபார்த்து பின்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் மே 27 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
  • ஆஃப்லைனில் விண்ணப்பிக்க நினைப்பவர்கள், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, அதில் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதன் பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி மாலை 6.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

DGM (HR &Admn.)-IA,

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,

பிளாட் எண்: ஜி - 5 & 6, பிரிவு - 10,

துவாரகா, புது தில்லி – 110 075

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்