Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamilnadu Education Fellowship Notification: தமிழ்நாடு கல்வித்துறையின் ஃபெல்லோஷிப் தொகையுடன் கூடிய வேலை….! இந்த தகுதி இருக்கா.. அப்ப கண்டிப்பா உங்களுக்குத் தான்…

Gowthami Subramani May 14, 2022 & 17:40 [IST]
Tamilnadu Education Fellowship Notification: தமிழ்நாடு கல்வித்துறையின் ஃபெல்லோஷிப் தொகையுடன் கூடிய வேலை….! இந்த தகுதி இருக்கா.. அப்ப கண்டிப்பா உங்களுக்குத் தான்…Representative Image.

Tamilnadu Education Fellowship Notification: பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து முக்கியமான கல்வி முயற்சிகளையும் செயல்படுத்துவதற்கும் தமிழ்நாடு கல்வி கூட்டுறவு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. ஜூலை 1, 2022 முதல் ஜூன் 30, 2024 வரையில் 2 ஆண்டுகளுக்கான ஃபெல்லோஷிப்ஸை இளம் நிபுணர்களை நியமிக்கக் கூடிய ஒரு கூட்டமைப்பை உருவாக்குகிறது. இதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பங்குபெற்ற விண்ணப்பதாரர்கள், 4 குழுக்களாகப் பிரிக்கப்படுவர் (Tamilnadu Education Fellowship Notification).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Tamilnadu Education Fellowship

பணியின் பெயர்

Fellows, Senior fellows

காலிப்பணியிடங்கள்

152

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஏப்ரல் 22, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

மே 15, 2022

தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்படும் நாள்

ஜூலை 01, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Fellows

38

Senior Fellows

114

மொத்தம்

152

 

ஃபெல்லோஷிப் தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஃபெல்லோஷிப் தொகை / மாதம்

Fellows

ரூ. 32,000 / மாதம் (02 வருடங்களுக்கு)

Senior Fellows

ரூ. 45,000 / மாதம் (02 வருடங்களுக்கு)

 

மேலும் படிக்க: மாதம் ரூ.50,000 கல்வி உதவித் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (TNEF Recruitment Notification 2022).

Fellows

Fellows பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மேலும், இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவங்களை கல்வித்துறை வழியாகப் பெற்றிருக்க வேண்டும்.

Senior Fellows

Fellows பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மேலும், இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவங்களை கல்வித்துறை வழியாகப் பெற்றிருக்க வேண்டும்.

தனித்திறமைகள்

இதில் விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் சரளமாக பேச, எழுத மற்றும் படிப்பவராக இருக்க வேண்டும்.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், மாநிலம்/ மாவட்டத்தின் தலைமை நிலையத்தில் இருக்க வேண்டும். உள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பயணம் செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

இதில் கலந்து கொள்ள விரும்பும்விண்ணப்பதாரர்கள், நேர்காணலில் நடைபெறுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (TNEF Apply Online).

  • விண்ணப்பதார்கள், இந்த லிங்கைக் க்ளிக் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • எந்தவொரு அனுபவமும் இல்லாத நபர்கள், இதில் விண்ணப்பிக்கக் கூடாது.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்