Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 1 & 2 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 09, 2022 & 16:30 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 1 & 2 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 1 மற்றும் 2 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

விமானந்தாங்கிக் கப்பல் விக்ராந்த்

இந்தியாவின் முதல் உள் நாட்டு விமானந்தாங்கிக் கப்பல் ஆன விக்ராந்த் கப்பலை கட்டிய கப்பல்கட்டுந்தளம் எது?

விடை: கொச்சி கப்பல் கட்டுந்தளம்

இந்தியாவின் முதலாவது உள்நாட்டு விமானந்தாங்கிக் கப்பலாக விளங்குவது “விக்ராந்த்” ஆகும். இது கொச்சின் கப்பல்கட்டுந்தளத்தால் கட்டப்பட்டு இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது. கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டுந்தளமான, CSL 76% அளவிலான உள்நாட்டு பாகங்களைக் கொண்டு இந்த கப்பலைக் கட்டியுள்ளது. இந்திய கடற்படையில், இந்திய கடற்படை கப்பலாக “விக்ராந்த்” பணியமர்த்தப்படும்.

அல் நஜா

இந்தியா மற்றும் ஓமன் நாடுகளின் கூட்டு இராணுவப் பயிற்சியான, “அல் நஜா” எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது.

விடை: இராஜஸ்தான்

இந்திய இராணுவம் மற்றும் ஓமன் ராயல் ஆர்மியும் கூட்டாக இணைந்து, சமீபத்தில் இந்தியாவில் உள்ள இராஜஸ்தானில் கூட்டு இராணுவப் பயிற்சியை 13 நாள்கள் தொடங்கியது. அதன் படி, இந்தியா-ஓமன் கூட்டு ராணுவப் பயிற்சியின் நான்காவது பதிப்பு “அல் நஜா” பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்.

புதுப்பிக்கப்பட்ட விநியோகப் பிரிவுத் திட்டம்

சமீபத்தில் தொடங்கப்பட்ட, “புதுப்பிக்கப்பட்ட விநியோகப் பிரிவுத் திட்டத்தை” செயல்படுத்துகிற நடுவண் அமைச்சகம்?

விடை: எரிசக்தி அமைச்சகம்

நடுவண் எரிசக்தி அமைச்சகத்தின் “புதுப்பிக்கப்பட்ட விநியோகப் பிரிவுத் திட்டத்தை” பிரதமர் அண்மையில் தொடங்கி வைத்தார். எரிசக்தி விநியோக நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

J C டேனியல் விருது

“J C டேனியல் விருது” எந்த மொழியில் திரைத்துறையில் வழங்கப்படக்கூடிய உயரிய விருதாகக் கருதப்படுகிறது?

விடை: மலையாளம்

கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான “J C டேனியல் விருது” பிரபல திரைப்பட இயக்குநரான K P குமரனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விருது, மலையாள திரைத்துறையின் மிக உயரிய விருதாகும். கலாச்சார விவகாரங்கள் துறையின் கீழ், இயங்கக் கூடிய லாப நோக்கமற்ற நிறுவனமான கேரள மாநில சலசித்ரா அகாடெமியால் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

44 FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி

இந்தியாவில் முதல் முறையாக FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்ட மாநிலம் எது?

விடை: தமிழ்நாடு

44 ஆவது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், தமிழக அரசால், சென்னைக்கு மிக அருகில் உள்ள மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்வதேச போட்டியை இந்தியாவில் நடத்துவது இதுவே முதல் முறை. உலகின் முன்னணி செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்