Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2,000 பேருக்கு வேலை வழங்கும் ZOHO....இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க...!

madhankumar July 20, 2022 & 10:48 [IST]
2,000 பேருக்கு வேலை வழங்கும் ZOHO....இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க...!Representative Image.

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக செயல்பட்டு வரும் ஜோஹோ (ZOHO) இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 2,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ (ZOHO). இதனை தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது சவூதி, தென் ஆப்ரிக்கா, அரேபியா, எகிப்து போன்ற நாடுகளில் தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்யவுள்ளது. எனவே அதற்கு 2,00 புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

புதிய பதவிகளை உருவாக்க திட்டமிட்டுள்ள நிறுவனம், அத்துடன் பொறியியல், வடிவமைப்பு, உள்ளடக்கம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் புதியவர்களை நியமிக்க உள்ளது. இது குறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜோஹோவின் தயாரிப்புகள், வரி, கணக்கியல் மற்றும் சம்பளப் பட்டியலின் தலைவரான பிரசாந்த் காந்தி, ZOHO ஏற்கனவே இந்தியா மற்றும் அமெரிக்காவின் நிறுவனத்தை கொண்டுள்ளது, மேலும் இந்தியாவில் தனது பணியாளர்களை அதிகரிக்க திட்டம் தீட்டியுள்ளது எனவும், தற்போது 10,800 பணியாளர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்,

மேலும் ZOHO நிறுவனத்தின் பாரம்பரியத்தை பின்பற்றி சிறிய நகரங்களில் இருந்து ஆட்களை பணியமர்த்தப்போவதாக தெரிவித்துள்ளார். கிராமப்புற இளைஞர்கள், சிறு நகரத்தின் இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் அருகாமையில் அலுவலகம் அமைத்து வேலைவாய்ப்பு வழங்குவதை இலக்காகக் கொண்டு ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது திறமையானவர்கள் மற்றும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்