Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

நெல்லையில் ஏகாதசி வழிபாடு கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! 

Kanimozhi Updated:
நெல்லையில் ஏகாதசி வழிபாடு கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! Representative Image.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கைசிக ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

108 திவ்ய தேசங்களில் ஒன்றானது திருக்குறுங்குடி அருள்மிகு ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோவில். இத் திருக்கோவிலில்பெருமாள் நின்ற நம்பி, கிடந்த நம்பி, இருந்த நம்பி என மூன்று ரூபங்களில்  மூலவராக அருள் பாலிக்கின்றாா்.  தன் பக்தன் நம்பாடுவானுக்காக கொடிமரத்தை விலக்கி காட்சி கொடுத்த இடம். கைசிக புராணம் நடைபெற்ற இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
 

சிறப்பு வாய்ந்த கைசிக ஏகாதசி திருவிழா இன்று திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயிலில் நடைபெற்றது. விழாவையொட்டி காலையில் அழகிய நம்பிராயருக்கு திருமஞ்சனமும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இரவில் தங்க தோளுக்கினான் பல்லக்கில் அழகியநம்பி மூலஸ்தானத்திலிருந்து வாத்தியங்கள் முழங்க திருக்குறுங்குடி பேரருளாள இராமானுஜ ஜீயா் சுவாமிகள் தலைமையில் வைணவ பொியவா்கள் பிரபந்தப்பாடல்கள் பாடியபடிவர கைசிக மண்டபத்திற்கு எழந்தருளினார். 

தொடா்ந்து  பேரருளா இராமானுஜ ஜீயா் சுவாமிகளுக்கு பாிவட்டம் மாலை அணிவித்து .  சடாாி மாியாதை செய்யப்பட்டது. கௌசிக எகாதசியை முன்னிட்டு ஆன்மீக உபன்யாசங்கள் ,பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் கௌசிக புராண நாடகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்நிகழ்சியை கண்டு மகிழ்ந்தனா். நாளை கௌசிக துவாதசியை முன்னிட்டு கருடசேவை நடைபெறுகின்றது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்