Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எலியால் 130 சவரன் திருட்டு? கடைசியில் நடந்த ட்விஸ்ட்..

Nandhinipriya Ganeshan Updated:
எலியால் 130 சவரன் திருட்டு? கடைசியில் நடந்த ட்விஸ்ட்..Representative Image.

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சரவணன், இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அதேபகுதியை சேர்ந்த மற்றொரு ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், இவர்களது வீட்டில் இருந்த 130 சவரன் தங்க நகைகளை நள்ளிரவில் மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரி எம்ஜிஆர் நகர் போலீசாரும், அசோக் நகர் காவல் உதவி ஆணையரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர், போலீசார் வீட்டை முழுவதுமாக சோதனை செய்துகொண்டிருந்தபோது, திருடு போனதாக கூறப்பட்ட 130 சவரன் தங்க நகைகளும் பீரோவில் இருப்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஐடி தம்பதி மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது சரியாக 12.30 மணியளவில் வீட்டில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டதாகவும், காலையில் எழுந்து பார்த்தப்போது பீரோ திறந்திருந்ததாகவும், சோதனை செய்து பார்க்கையில் நகைகள் இல்லாததால் பதற்றமடைந்து போலீசில் புகார் அளித்ததாகவும் சரவணன் தெரிவித்தார்.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் எலி தொல்லை காரணமாக பாத்திரங்கள் உருண்டு விழுந்ததும், அதை கொள்ளையர்கள் என அந்த தம்பதியினர் தவறாக நினைத்ததும் தெரியவந்தது. வீட்டில் பொருட்கள் காணவில்லை என்றால் பதற்றமடையாமல், நிதானத்துடன் தேடுமாறு அவர்களுக்கு அட்வைஸ் செய்துவிட்டு போலீசார் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தை பார்க்கும்போது வடிவேலு ஒருபடத்தில் ஆடு திருடு போகல; யாரோ ஆட்டை திருடுன மாதிரி கனவு கண்டதாக சொல்லும் அந்த சீன் தான் நினைவுக்கு வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை