Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் கோர விபத்து; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு! 

KANIMOZHI Updated:
ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் கோர விபத்து; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு! Representative Image.

குமுளி மலைச்சாலையில் நடந்த விபத்தில் தீவிர சிகிச்சையில் இருந்த கார் ஓட்டுநர் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த 11 பேர் கொண்ட அய்யப்ப பக்தர்கள் குழு நேற்று முன் தினம் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். 

தரிசனம் முடிந்தபிறகு அவர்கள் நேற்று இரவு ஆண்டிப்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை ஆண்டிப்பட்டியை அடுத்த பிச்சம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (40) என்பவர் ஓட்டி வந்துள்ளார். 

நேற்று இரவு 12 மணி அளவில் குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் மாதா கோவில் அருகில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, மலைப்பாதையில் இருந்து சுமார் 40 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

பெரியாறு அணையில் இருந்து லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரக்கூடிய ராட்சத குழாய்கள் மீது மோதியதில் கார் அப்பளம் போல் சுக்குநூறாக நொறுங்கியது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமிழக மற்றும் கேரள காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புபணியில் ஈடுபட்டனர். 

இந்த கோர விபத்தில் காரில் வந்த, ஆண்டிபட்டியைச் சேர்ந்த சக்கம்பட்டியைச் சேர்ந்த  முனியாண்டி (55), தேவதாஸ் (55), கன்னிச்சாமி (55), நாகராஜ் (46), வினோத் (47), சிவக்குமார் (45),  கலைச்செல்வன் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த கார் டிரைவர் ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன் அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்பவரது 11 வயது மகன்  ஹரிஹன் தேனி அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சையில் இருந்த கார் டிரைவர் கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துபோனார்.

 இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 இருந்து 8 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த ராஜா மற்றும் சிறுவன் ஹரிஹரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐயப்ப பக்தர்களின் வாகனம் விபத்தக்குள்ளாகி எட்டுபேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்