Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வங்கிக்கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.200 கோடி மோசடி - தேனியில் பதுங்கியிருந்த மோசடி மன்னன் கைது

Saraswathi Updated:
வங்கிக்கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.200 கோடி மோசடி - தேனியில் பதுங்கியிருந்த மோசடி மன்னன் கைது Representative Image.

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தொழில்செய்வதற்கு வங்கியில் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி, 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி தேனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது சகோதரர் விஜயகுமார் மற்றும் அவரது மகன் ராகுல்பாலாஜி மற்றும் பிரவீனா ஆகிய நால்வரும், கோவை,திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில்  50க்கும் மேற்பட்டோரிடம் தொழில் செய்வதற்கு வங்கி கடன் வாங்கி தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.

இதையடுத்து, கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, ரத்தினசாமி, குமரேசன், பிரியா, உள்ளிட்ட 15 மேற்பட்டோர், சிவக்குமார் உள்ளிட்ட 4 பேர் தங்களிடம் பணமோசடி செய்துவிட்டதாககவும், தங்களுக்குச் சேர வேண்டிய பல கோடி ரூபாய் பணத்தை பெற்று தரும்படியும் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  

இது தொடர்பாக பல்லடம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காதநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்ச்சியாக புகார் மனு அளித்தனர். இதையடுத்துபல்லடம் காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட சிவக்குமார் உட்பட நான்கு பேர்மீது வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து அவர்களைத் தேடி வந்தனர். 

கடந்த மூன்று‌ மாதங்களுக்கு முன்பு சிவக்குமார் மற்றும் பிரவீனா ஆகியோர் கைதான நிலையில், இருவரும் ஜாமீனில் வெளியே வந்த பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகாததால், இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்துதனிப்படை போலீசார் ஆந்திரா,கேரளா,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சிவக்குமார் மற்றும் பிரவீனா ஆகியோரை தேடி வந்தநிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரவீனா திருச்சியில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.  

தொடர்ந்து தலைமறைவாக இருந்த மோசடி மன்னன் சிவகுமார், தேனியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பல்லடம் அழைத்து வரப்பட்ட சிவகுமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்த தனிப்படை போலீசார், அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வங்கியில் கடன்பெற்றுத்தருவதாகக் கூறி 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி சிவகுமாரை போலீசார் கைது செய்தள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்