Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யூடியூப் இளைஞரின் செயலுக்கு கமிஷ்னர் கடும் கண்டனம்….!

Gowthami Subramani [IST]
யூடியூப் இளைஞரின் செயலுக்கு கமிஷ்னர் கடும் கண்டனம்….! Representative Image.

சமீபத்தில், டிடிஎஃப் வாசன் என்பவர் அதிவேகத்தில் பைக் ஓட்டி மற்ற இளைஞர்களுக்குத் தெரியும் வகையில் யூடியூப்-ல் பதிவிட்டிருந்தார். இது மற்ற இளைஞர்களின் வாழ்க்கையையும் வீணடித்து விடும் என்று கூறுகிறார் மாநகர காவல் ஆணையர்.

பைக் சாகசம்

தற்போது இளைஞர்கள் பெரும்பாலும் பைக்கில் பல்வேறு சாகசம் புரிந்து வருகின்றனர். இதனை சோசியல் மீடியாவில் பதிவேற்றம் செய்வதுடன், மற்ற இளைஞர்களும் இதனைப் போலவே செய்து வந்து கொண்டிருக்கின்றனர். TTF வாசன் என்ற நபர், Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் கடந்த இரன்டு வருடங்களாக டிராவல் விலாக் என்ற யூடியூப் பக்கத்தையும் நடத்தில் அதில் பயணம் தொடர்பான விஷயங்களைப் பதிவிட்டு இளைஞர்களைக் கவர்ந்துள்ளார். இவருக்கு யூடியூப்-ல் தற்போது 27.6 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் இருக்கின்றனர்.

சமூக வலைதளங்கள்

சோசியல் மீடியாவில் ஒருவர் ஒரு செய்தியைப் பரப்பினால், அது அனைவருக்கும் சேர்ந்து விடும் என்ற நோக்கத்தில் வந்தது. ஆனால், இதனை தவறான வழியில் பயன்படுத்துபவர்கள் தான் இன்று இருக்கின்றனர். நாம் பரப்பும் செய்தி மற்றவர்களுக்கு முன்னோடியாக இல்லாவிடினும், அவர்களின் வாழ்க்கைக்குக் கேடு தருவது போல அமையக்கூடாது.

சாலை விதிகளை மீறி

அவ்வாறு சமீபத்தில் இவர் லடாக் சென்று ஒரு வீடியோவை யூடியூப்-ல் பதிவிட்டுள்ளார். ஆனால், இவர் பைக்கில் வேகமாக செல்வது, கி.மீ அதிக பாயிண்டுகளைக் காட்டியபடி ரேஸ் செய்து வீடியோவாக போட்டுள்ளார். இவரின் இந்த செயல் மற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டுவதாக இருந்ததால், இதற்கு கடும் கண்டனங்கள் விதிக்கப்பட்டது. இவர் சாலை வீதிகளை மீறி மற்ற இளைஞர்களுக்கு பைக் சாகசம் போன்ற தவறான விஷயங்களைப் பகிர்ந்துள்ளதால், இவர் மீது புகார் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் இவர் சென்னைக்கு சில பொருள்கள் வாங்குவதற்காக வந்திருக்கும் போது, அதை முன்கூட்டியே அவரது யூடியூப் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார். இதனால், அவரை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருக்கின்றனர்.

பிறந்த நாளை முன்னிட்டு

இவரது பிறந்தநாளை முன்னிட்டு, TTF வாசன் கடந்த ஜூலை 9 ஆம் நாள் ரசிகர்களை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். இதனால், லட்சக்கணக்கில் ரசிகர்கள் இவரைக் காண குவிந்ததால், அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அங்கு நிலவிய கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, இவர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளைஞர்களின் வாழ்க்கை வீணடிப்பு

இவர் சாலை வீதிகளை மீறி, மதிக்காமல் வேகமாக பைக் ஓட்டியது போன்ற நிறைய புகார்கள் உள்ளன. இந்த நிலையில், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் தெரிவித்ததாவது, TTF வாசன் போன்றோர் இளைஞர்களின் வாழ்க்கையை வீணடித்து வருகின்றனர். சட்டத்தை மதிக்காமல் செயல்படும் அனைவருமே காவல்துறை கண்காணிப்பில் வந்து விடுவர்.

பைக்கை பறிமுதல் செய்வோம்

இவ்வாறு, பைக்கில் வேகமாக செல்லும் நபர்களைக் கண்காணித்து வருகிறோம். இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களின் பைக்குகளைப் பறிமுதல் செய்யப்படும் எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்