Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தலைமுடியை தானமாக கொடுத்த கல்லூரி மாணவிகள்; எதற்கு தெரியுமா?

KANIMOZHI Updated:
தலைமுடியை தானமாக கொடுத்த கல்லூரி மாணவிகள்; எதற்கு தெரியுமா?Representative Image.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு நம்பிக்கையின் பூட்டுகள் என்ற தலைப்பில் தலைமுடியை கல்லூரி மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் நன்கொடையாக வழங்கினார்கள். 

இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தலைமுடியை நன்கொடையாக வழங்கினார்.கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள் என பல்வேறு நபர்கள் தலைமுடியை நன்கொடையாக வழங்கினார்கள்.

காசு,பணம் கொடுத்து புற்றுநோயாளிக்கு உதவ முடியவில்லை என்றாலும் எனது தலைமுடியை கொடுத்து அவர்களுக்கு உதவுவதாக கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் பார்வதி கூறினார். என்னுடைய தலை முடி மற்றும் கொண்டு செல்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.

கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று 120 மாணவிகள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் புற்றுநோயாளிகளுக்கு தலைமுடியை நன்கொடையாக வழங்கினார்கள்.இன்று 100-க்கும் மேற்பட்ட மாணவிகள்,ஆசிரியர்கள் தலைமுடியை நன்கொடையாக வழங்கினார்கள்.

தலைமுடியை விக்காக வடிவமைத்து புற்று நோயாளிகளுக்கு வழங்கிருப்பதாக தெரிவித்தார். தற்போது 100 வீக் (Wig) செய்ய இருப்பதாக கூறினார்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப வழங்க இருப்பதாக கூறினார்கள்.

வருகின்ற பிப்ரவரி 4-ஆம் தேதி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்