Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,394.42
-354.00sensex(-0.49%)
நிஃப்டி21,945.60
-110.10sensex(-0.50%)
USD
81.57
Exclusive

கோவையில் உச்சகட்ட பதற்றம்.. குண்டர் சட்டம் பாயும்.. கமிஷனர் எச்சரிக்கை!!

Sekar September 24, 2022 & 12:43 [IST]
கோவையில் உச்சகட்ட பதற்றம்.. குண்டர் சட்டம் பாயும்.. கமிஷனர் எச்சரிக்கை!!Representative Image.

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் உச்சகட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில், சமூக விரோத செயல்களில்  ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என கோவை கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் பிஎப்ஐ அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தது. இதையடுத்து கோவை, பொள்ளாச்சி மற்றும் ஈரோடு உள்ளிட்ட அப்பகுதிகளில் பாஜக அலுவலகம், பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினருக்கு சொந்தமான இடங்களில் திடீரென பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை செய்தது யார் என்பது தற்போது வரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க கோவையில் போலீசார் குவிக்கப்பட்டு, பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கடந்த மூன்று நாட்களாக அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் கோவையில் பதற்றமான சூழல் நிலவுவதால் ஏடிஜிபி தாமரை கண்ணன் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த கோவை எஸ்பி, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை