Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்திலேயே முதன் முறை; அமைச்சர் ஆரம்பித்து வைத்த அசத்தல் திட்டம்! 

KANIMOZHI Updated:
தமிழகத்திலேயே முதன் முறை; அமைச்சர் ஆரம்பித்து வைத்த அசத்தல் திட்டம்! Representative Image.

தமிழகத்திலேயே முதல்முறையாக நூலக நண்பர்கள் திட்டம் திண்டுக்கல்லில் தொடங்கப்பட்டுள்ளது. 

தமிழக பொது நூலகத்துறை மூலமாக நூலக நண்பர்கள் திட்டம் திண்டுக்கல்லில் இன்று நூலக நண்பர்கள் திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். 

நூலகத்திற்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், புத்தக ஆர்வலர்கள், குழந்தைகள், மாணவர்கள், குடும்பத் தலைவிகள், மருத்துவமனை உள் நோயாளிகள் ஆகியோரை தேடி அவர்கள் இருக்கும் இடத்திற்கே தன்னார்வலர்கள் மூலம் கொண்டு செல்லப்படும்.

நூலகத்திற்கு வர முடியாதவர்கள் வாசிக்கும் தேவை உள்ளவர்கள் ஆகியோரை நூலக நண்பர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக பதிவு செய்து அவர்களுக்கு தன்னார்வர்கள் மூலமாக தேவையான நூல்களை பெற்று பயன்படலாம்.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக 31 மாவட்ட மைய நூலகங்கள், 300 முழு நேர கிளை நூலகங்கள், 1,463 கிளை நூலகங்கள், 76 ஊர் புற நூலகங்கள் என மொத்தம் 2,500 நூலகங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்தின் நோக்கமே அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும். இந்நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் விசாகன், பழனி எம்எல்ஏ செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், நூலகத்துறை இணை இயக்குனர் அமுதவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ள 350 தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கைப்பை வழங்கப்பட்டது. பின்னர் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில் :-  தமிழகத்திலேயே முதல் முறையாக திண்டுக்கல்லில் நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டத்தை துவக்கி உள்ளோம் இந்த திட்டத்திற்காக 56.25 லட்சம் செலவு செய்ய உள்ளோம். செலவு என சொல்வதை விட அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான முதலீடு என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழகம் முழுவதும் 12,500 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர் இந்தத் திட்டத்தில் 15 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க உள்ளோம் ஒவ்வொரு  தன்னார்வலர்களுக்கும் 25 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது அவர்கள் மூலம் குழந்தைகள், வயதானவர்கள், குடும்பப் பெண்கள், பயனடைவார்கள். வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது ஊர்புற நூலகர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக  பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. என தெரிவித்தார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்