Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளைமுதல் விற்பனை நிறுத்தம்..! - திருப்பூர் மாவட்ட ஹாலோபிளாக் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

Saraswathi Updated:
நாளைமுதல் விற்பனை நிறுத்தம்..! - திருப்பூர் மாவட்ட ஹாலோபிளாக் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு Representative Image.

தமிழகத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள் தொடர் வேலைநிறுத்தத்தால், மூலப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் ஹாலோ பிளாக் கற்கள் விற்பனை நிறுத்தப்படுவதாக மாவட்ட ஹாலோபிளாக் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மூலப்பொருட்கள் பற்றாக்குறையால், ஹாலோ பிளாக் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், நாளை முதல் ஹாலோ பிளாக் கற்கள் விற்பனையை நிறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.  

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்டம் ஆலோ பிளாக் அசோசியேசன் செயலாளர் நாச்சிமுத்து, தமிழகத்தில் கடந்த 5  நாட்களாக கல்குவாரிகள் கிரஷர்கள் லாரிகள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றன.  மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் ஹாலோ பிளாக் கற்களை  உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சாதாரணமாகவே உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு ஹாலோ பிளாக் கல் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  குவாரிகளில் உருவாகும் ஜல்லிகளைக் கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.  

இந்நிலையில், கல்குவாரிகள், கிரஷர்கள் வேலைநிறுத்தத்தால் ஹாலோ பிளாக் கல் உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால், நாளை முதல் கற்கள் விற்பனை நிறுத்தப்படுகிறது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகள், மற்றும் அரசு டெண்டர் ஒப்பந்த பணிகள் ஆகியவை முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்