Wed ,May 29, 2024

சென்செக்ஸ் 74,614.09
-556.36sensex(-0.74%)
நிஃப்டி22,723.40
-164.75sensex(-0.72%)
USD
81.57
Exclusive

மலேசியாவுக்கு முதல் முறையாக.. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து.. குஷியில் உற்பத்தியாளர்கள்!!

Sekar Updated:
மலேசியாவுக்கு முதல் முறையாக.. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து.. குஷியில் உற்பத்தியாளர்கள்!!Representative Image.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட உள்ளதால், முட்டை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மலேசியர்களின் உணவில் முக்கிய இடம் பெறுவது சிக்கனும் முட்டையும் தான். ஆனால், கடந்த சில மாதங்களாக அங்கு முட்டைத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது அங்கு புதிதாக பிரதமராக பதவியேற்ற அன்வர் இப்ராஹிம் தலைமையிலான அரசுக்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அந்நாட்டு அரசு, கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதகத்திடம், இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்ய உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சரசரவென களத்தில் இறங்கிய அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள், டெல்லியில் உள்ள உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திற்கு தகவலை பாஸ் செய்துள்ளனர்.

அங்கிருந்து, சென்னையில் உள்ள விலங்கு தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவைகள் அமைப்புக்கு இந்த தகவல் கிடைத்த நிலையில், துரிதமாக செயல்பட்டு நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து, மலேசியாவுக்கான முட்டை ஏற்றுமதி ஆர்டர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏற்றுமதிக்கான முதல் கன்சைன்மெண்ட் 2 லட்சம் முட்டைகளுடன் இன்று மாலை 5 மணிக்கு திருச்சியிலிருந்து விமானம் மூலம் கிளம்ப உள்ள நிலையில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து ஏற்றுமதியை தொடங்கி வைக்க உள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்