Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு ரூபாய் கொடுக்காத கண்டக்டர்.. விஜய் பட பாணியில் 30,000 ரூபாயை இழப்பீடாக பெற்ற பயணி!!

Sekar Updated:
ஒரு ரூபாய் கொடுக்காத கண்டக்டர்.. விஜய் பட பாணியில் 30,000 ரூபாயை இழப்பீடாக பெற்ற பயணி!!Representative Image.

விஜய் நடித்த தமிழன் பட பாணியில், பஸ் பயணியிடம் கூடுதலாக ஒரு ரூபாய் வசூலித்த அரசு போக்குவரத்து கழக பேருந்து நடத்துனருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஸ்'ல போகும்போது நம்மில் பலரும் சில்லறை பிரச்சினையை எதிர்கொண்டவர்களாக தான் இருப்போம். பல சமயங்களில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்காக நடத்துனரிடம் சண்டை போட்டுவிட்டு, கடைசியில் சில்லறையை வாங்காமலேயே சென்ற அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும்.

ஆனால் ஒரு சில பயணிகள் தான், இந்த சில்லறையை பெற்றே தீருவேன் என்ற உறுதியுடன் நீதிமன்றம் வரை போராடுகின்றனர். அப்படி போராடி தனக்கு நடத்துனர் வழங்க வேண்டிய மீதி ஒரு ரூபாயை பெற்றதோடு, 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாகவும் பெற்றுள்ளார் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர்.

நடந்தது என்ன?

திருச்செங்கோட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு சென்ற அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது பேருந்தின் நடத்துனர், பாலசுப்பிரமணியத்திடம் 10 ரூபாயை வாங்கிக்கொண்டு 7 ரூபாய்க்கான டிக்கெட்டை கொடுத்து, மீதம் 2 ரூபாயை கொடுத்துள்ளார். ஒரு ரூபாயை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பாலசுப்பிரமணியம் தனக்கு சேர வேண்டிய மீதம் ஒரு ரூபாயை தருமாறு கூறியும் நடத்துனர் தராததால், அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் முறையிட்டார்.

இது குறித்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் நடத்துனர், திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் வட்டார போக்குவரத்து கழக துணை மேலாளர் (சேலம் மேற்கு) சேர்ந்து, பயணிக்கு கொடுக்க வேண்டிய மீதம் ஒரு ரூபாயை வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ரூ.30,000 இழப்பீடு

மேலும், பயணிக்கு ஒரு ரூபாயை வழங்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும், சேவை குறைப்பாட்டிற்காகவும், பயணிக்கு ரூ.25,000 இழப்பீடு மற்றும் ரூ.5,000 வழக்கு செலவு என மொத்தம் ரூ.30,000 ரூபாயை இரண்டு மாதத்திற்குள் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

விஜய் நடித்த தமிழன் படத்தில், நடத்துனர் ஒரு பயணிக்கு சில்லறை தராமல் அவமரியாதை செய்வது போலவும், அந்த வழக்கை நுகர்வோர் நீதிமன்றம் கொண்டு சென்று இழப்பீடு பெற்றுத் தருவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்