Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

தரக்குறைவாக பேசிய கல்லூரி முதல்வர்; கொதித்தெழுந்த மாணவிகள் செய்த காரியம்! 

Kanimozhi Updated:
தரக்குறைவாக பேசிய கல்லூரி முதல்வர்; கொதித்தெழுந்த மாணவிகள் செய்த காரியம்! Representative Image.

நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வரை கண்டித்தும் அவரை மாற்றக்கோரி வணிகவியல் துறை மாணவிகள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலை கல்லூரி திருச்சி சாலையில் செயல்பட்டு வருகிறது இதில் சுமார் 1500 க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி முதல்வராக திருமதி பால் கிரேஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே பணியாற்றிய கல்லூரியில் அம்பேத்கர் படத்தை அகற்றியது கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை தரக்குறைவாக பேசுவது உள்ளிட்ட செயல்கள் காரணமாக கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

அதன்பின்னர்,  நீதிமன்றத்திற்கு சென்று சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தடை ஆணையைப் பெற்று மீண்டும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் நேற்று வணிகவியல் துறை தலைமை பேராசிரியர்  நல்லுசாமி தனது துறையில் பயிலும் மாணவிகளின் இண்டன்ஷிப்புக்கு கையெழுத்து வாங்க கல்லூரி முதல்வர் பால் கிரேஸை சந்தித்துள்ளார். 

அப்போது பேராசிரியர் நல்லுசாமியை மாணவிகள் முன்னிலையில் தகாத வார்த்தைகள் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி முதல்வரை மாற்றக் கோரி வணிகவியல் துறையை சார்ந்த மாணவிகள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்