ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து 120 நாட்கள் வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
பவானியில் உள்ள காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வரை 90 கிலோ மீட்டர் சென்று நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இதன் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இணைந்து அணைக்கட்டில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். அக்டோபர் 13-ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளதால், விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
காளிங்கராயன் அணைக்கட்டு வாய்க்கால் பாசனத்தின் மூலம் வாழை, மஞ்சள், நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நடப்பாண்டும் விளைச்சல் பெருகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…