Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சதுகிரி கோவிலுக்குச் செல்ல தடை - பக்தர்கள் ஏமாற்றம்! 

Kanimozhi Updated:
சதுகிரி கோவிலுக்குச் செல்ல தடை - பக்தர்கள் ஏமாற்றம்! Representative Image.

ஸ்ரீவில்லிபுத்தூர் மழையின் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் பிரதோஷத்தில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம் ,அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். 

இந்நிலையில் கடந்த சில திதனங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே இன்று பிரதோஷத்திற்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த  பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்