Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,895.44
899.13sensex(1.23%)
நிஃப்டி22,415.30
291.65sensex(1.32%)
USD
81.57
Exclusive

திருமணமான ஆறே மாதத்தில் சோகம்.. கண்ணீர் விட்டு கதறிய தாய்!!

Sekar November 19, 2022 & 14:46 [IST]
திருமணமான ஆறே மாதத்தில் சோகம்.. கண்ணீர் விட்டு கதறிய தாய்!!Representative Image.

சிவகங்கை மாவட்டத்தில் திருமணமான ஆறே மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் அரசு மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முத்து என்பவற்றின் மகள் ஜெபஸ்லீ (23). இவருக்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலையைச் சேர்ந்த திரவியம் என்பவற்றின் மகன் ஜெகதீஷுக்கும் (26) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இருவரும் திருமணத்திற்கு பிறகு மானாமதுரை பர்மா காலனியில் வசித்து வந்தனர். ஜெகதீஷ் முதுகுளத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடும்பப் பிரச்சினையில் ஜெபஸ்லீ தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு ஜெபஸ்லீயின் சடலம் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே தகவலறிந்து வந்த ஜெபஸ்லீயின் உறவினர்கள், ஜெபஸ்லீ இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி மானாமதுரை அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். 

மேலும் அங்கிருந்த ஜெபஸ்லீயின் கணவர் ஜெகதீஷையும் அவர்கள் தாக்க முயன்றனர். அப்போது மருத்துவமனை கண்ணாடி உடைந்ததோடு, அங்கிருந்த எஸ்ஐ அருள்ராஜின் கையில் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த கோட்டாட்சியர் சுகிதா, வட்டாட்சியர் சாந்தி மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் சமரசப்படுத்தினர். 

இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு ஜெபஸ்லீ உடலை வாங்கி சென்றனர். மேலும் ஜெபஸ்லீயை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெகதீஷ் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்