Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகர் விஜய்க்கு அபராதம்… விஐபி-க்கு மட்டும் அனுமதிக்குமோ..?

Gowthami Subramani Updated:
நடிகர் விஜய்க்கு அபராதம்… விஐபி-க்கு மட்டும் அனுமதிக்குமோ..? Representative Image.

சென்னை போக்குவரத்து காவலர்கள், நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்துள்ளதாக கூறிய தகவல்களை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்தார். அதன் படி, சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் விஜய்யின் காரின் கண்ணாடியில் கருப்பு நிற பிலிம் ஒட்டப்பட்டிருந்தது. இது குறித்த வெளிவரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இது குறித்து, பொதுமக்களில் ஒருவர் போக்குவரத்து காவல்துறையின் சமூக வலைதல பக்கத்தில் இது தொடர்பான காட்சியை பதிவிட்டுள்ளார். இதில் அவர், மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் கருப்பு நிற பிலிம் ஒட்டியதற்கு விஜய் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. விஐபிகள் மட்டும் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட மோட்டார் வாகனச் சட்டம் அனுமதிக்குமோ என்ற கேள்வி கேட்டு பதிவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், இவருக்குப் பதிலளிக்குமாறு சென்னை காவல்துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட இனோவா காருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அபராத ரசீதையும் வெளியிட்டுள்ளது. ‘TN 07 CJ 5557’ என்ற எண் கொண்ட வாகனமானது நடிகர் விஜய்யின் பெயரில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்