Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

முக்கிய பிரபலம் மாரிமுத்து திடீர் மரணம்...ஸ்தம்பித்து போன திரையுலகம் மற்றும் ரசிகர்கள்!

Priyanka Hochumin Updated:
முக்கிய பிரபலம் மாரிமுத்து திடீர் மரணம்...ஸ்தம்பித்து போன திரையுலகம் மற்றும் ரசிகர்கள்!Representative Image.

தமிழ் திரையுலகின் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து அவர்கள் இன்று காலை எதிர்பாராத விதமாக காலமானார். இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2008 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் என்ற சினிமா மூலம் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார் மாரிமுத்து. பல ஏற்றம் இறக்கங்களை தாண்டி பல திரைப்படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் 2022 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர் இவருக்கு மிகப்பெரிய இடத்தை வழங்கியுள்ளது. அதில் ஆதிகுணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் 'ஏம்மா ஏய்' என்னும் டயலாக்கிற்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 
அப்படியான அங்கீகாரத்தை அளித்த எதிர்நீச்சல் சீரியலில் இன்று காலை டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை அருகில் உள்ள வடபழனி சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் குறைப்படுகிறது. இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்