Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57
Exclusive

மீண்டும் மீண்டுமா? பிரபல இளம் வயது நடிகையுடன் விஷாலுக்கு திருமணம்..? | Actor Vishal Marriage

Nandhinipriya Ganeshan Updated:
மீண்டும் மீண்டுமா? பிரபல இளம் வயது நடிகையுடன் விஷாலுக்கு திருமணம்..? | Actor Vishal MarriageRepresentative Image.

அவ்வப்போது பிரபலங்களின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். சில சமயங்களில் அது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். அப்படி தற்போது நடிகர் விஷாலின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாக வருகிறது. நடிகர் விஷால் தற்போது 'துப்பறிவாளன்', 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு, பிரிந்த காதலியுடன் திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கு முன்பு நடிகர் விஷாலுக்கும் நடிகை வரலட்சுமிக்கும் காதல், விரைவில் அவர்கள் திருமணம் செய்ய போகிறார்கள் என சொல்லப்பட்டது. ஆனால், இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதன்பிறகு, 'கும்கி' திரைப்படம் மூலம் அறிமுகமாகி 'சுந்தர பாண்டியன்' படத்தின் மூலம் பிரபலமானவர் லட்சுமிமேனன். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு விஷாலுடன் 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் இணைந்து நடித்திருந்தார். 

அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் இந்த விவகாரம் குறித்து இருவருமே வாய் திறக்கவில்லை. முன்னதாக விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணம் நின்றுவிட்டது. விஷாலை பிரிந்த அனிஷா வாழ்வில் மீண்டும் காதல் வந்திருக்கிறது. இதற்கிடையே விஷாலுக்கும், நாடோடிகள் படம் புகழ் அபினயாவுக்கும் இடையே காதல் என பேச்சு கிளம்பியது. அந்த தகவலும் உண்மை இல்லை என்று விஷாலும், அபினயாவும் தெரிவித்தார்கள். 

இந்நிலையில், மீண்டும் லட்சுமி மேனன் உடன் விஷாலுக்கு திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க கட்டிடம் முடிந்தால் தான் திருமணம் என சொல்லி வந்த விஷால் அதன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அவரது திருமணம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த தகவலை விஷாலோ, லட்சுமி மேனனோ உறுதி செய்யும்வரை நம்ப முடியாது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்