Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57
Exclusive

முழு வேட்டையனாக மாறிய ராகவா லாரன்ஸ்...சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் லுக் | Chandramukhi 2 Vettaiyan Look

Priyanka Hochumin Updated:
முழு வேட்டையனாக மாறிய ராகவா லாரன்ஸ்...சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் லுக் | Chandramukhi 2 Vettaiyan LookRepresentative Image.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் சந்திரமுகி. 2005 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் - ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர் ஆகியோர் நடித்தனர். தென்னிந்திய சினிமா வரலாற்றில் இப்படி ஒரு மாபெரும் வெற்றியை வேறு எந்த படத்திற்கும் நாம் பார்த்திருக்க முடியாது. சந்திரமுகி படத்தின் ரிலீஸ்-க்கு பிறகு ரசிகர்கள் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

முழு வேட்டையனாக மாறிய ராகவா லாரன்ஸ்...சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் லுக் | Chandramukhi 2 Vettaiyan LookRepresentative Image

அதற்கு பதிலாக சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு 'சந்திரமுகி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் அவர்கள் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க இருக்கிறார். அவர்களுடன் ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி, மஹிமா நம்பியார் ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படி பட்ட பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் ஆனது ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்தில் இருக்கும் போஸ்டர். ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் வரும் விநாயக சதுர்த்தி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்