Sun ,Apr 21, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

லியோ படக்குழு மீது விஜய் அப்செட்.. காரணம் என்ன தெரியுமா?

Aruvi Updated:
லியோ படக்குழு மீது விஜய் அப்செட்.. காரணம் என்ன தெரியுமா?Representative Image.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விக்ரம் படத்தின் மெகா ஹிட் லோகேஷ் கனகராஜ் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருப்பதால் இந்தப் படத்தை ஒட்டுமொத்த கோலிவுட்டுமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

நட்சத்திர படை: ஒரு படத்தில் மூன்று நட்சத்திரங்களை வைத்து சமாளிப்பதே பெரிய வேலை என்று டாக் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் லியோவிலோ சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், மாத்யூ தாமஸ், த்ரிஷா, மடோனா செபாஸ்டியன், அனுராக் காஷ்யப் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தனுஷும் ஒரு கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக புதிய தகவலும் வெளியாகியிருந்தது. ஆனால் அது வதந்திதான் என உறுதி செய்யப்பட்டது.

இறுதிக்கட்ட ஷூட்டிங்: காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் அதன் பிறகு சென்னையில் அவுட்டோரிலும், ஸ்டூடியோவிலும் நடந்துவந்தது. ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு  500க்கும் மேற்பட்டவர்கள் நடனம் ஆடிய நா ரெடிதான் பாடல் ஷூட் செய்யப்பட்டது. இதனையடுத்து திருப்பதியில் ஷூட்டிங் நடந்ததாக கூறப்பட்டது. அங்கு விஜய் உள்ளிட்டோர் நடித்தனர்.

விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் 22ஆம் தேதி நா ரெடிதான் பாடல் வெளியானது. அந்தப் பாடல் வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருசேர சந்தித்தது. இருப்பினும் பாடலில் விஜய்யின் லுக்கும், நடனமும் பெரிதும் பேசப்பட்டது. எனவே அந்தப் பாடலை திரையில் பார்ப்பதர்கு ரசிகரள் பேரார்வத்துடன் உள்ளனர். அதேபோல் படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப்புகள் என்றும் தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் லியோ படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டதாக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அறிவித்தார். இதனால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன.

இந்நிலையில் லியோ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து விஜய் புகைப்படம் எடுக்க சென்றிருக்கிறார். ஆனால் அங்கு கூட்டம் அதிகம் ஆனதால் எதுவுமே சொல்லிக்கொள்ளாமல் விஜய் பாதியிலேயே அதிருப்தியோடு வெளியேறிவிட்டதாக ஒரு தகவல் கோலிவுட்டில் உலாவிக்கொண்டிருக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்