Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57
Exclusive

ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா.. வெளியானது அப்டேட்! | Jailer Audio Launch

Aruvi Updated:
ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா.. வெளியானது அப்டேட்! | Jailer Audio LaunchRepresentative Image.

சென்னை: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிஉர்க்கும் இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், யோகிபாபு, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஆகஸ்ட் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படத்திலிருந்து முதல் சிங்கிள் சில வாரங்களுக்கு முன்னதாக வெளியானது. ரஜினிகாந்த்தின் படத்திலிருந்து சிங்கிள் வெளியாவதால் நிச்சயம் தலைவர் சம்பவமாகத்தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் ஆவலோடு பார்த்தனர். ஆனால் அவர்களது ஆவல் அனைத்தையும் தமன்னா தவிடு பொடியாக்கவிட்டார். முழுக்க முழுக்கா தமன்னாவுக்காக அந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருந்தது.

தலைவரின் பாடலில் மற்றொருவர் ஸ்கோர் செய்துவிட்டாரே என்ற ஆதங்கம் ரஜினி ரசிகர்களிடம் இருந்தது. மேலும், எதற்காக தமன்னாவுக்கான பாடலில் ரஜினிகாந்த்தை உள்ளே கொண்டு வர வேண்டும். ஏதோ சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் போல் இந்தப் பாட்டில் ரஜினியை நெல்சன் உபயோகப்படுத்திவிட்டார் என காட்டமாகவே விமர்சனத்தை முன்வைத்தனர்.

சூழல் இப்படி இருக்க படத்தின் இரண்டாவது சிங்கிள் ஹுக்கும் பாடல் வெளியானது. பாடல் வரிகள் முழுக்க முழுக்க ரஜினிக்காகவே உருவாக்கப்பட்டிருந்தது.  மேலும் பாடல் எழுதிய சூப்பர் சுப்புவையும் சூப்பர் ஸ்டார் பாராட்டியிருந்தார். 

இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படி ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடக்கவிருப்பதாக ப்ரோமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறத். அநேகமாக இந்த மாதத்தின் இறுதியில் விழா நடைபெறலாம் என கருதப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்