Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

வருங்கால கணவருடன் சுற்றுலா சென்ற நடிகை நேர்ந்த பரிதாபம்..

Nandhinipriya Ganeshan Updated:
வருங்கால கணவருடன் சுற்றுலா சென்ற நடிகை நேர்ந்த பரிதாபம்.. Representative Image.

'சாராபாய் vs சாராபாய்’ என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வைபவி உபாத்யாயா. 2004 - 2006 வரை ஸ்டார் ஒன் சேனலில், ஒளிப்பரான தொடர் ‘சாராபாய் vs சாராபாய்'. இரண்டு சீசன்களாக ஒளிபரப்பான இத்தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில்  வைபவி உபாத்யாயா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் தொடருக்கு பிறகு வைபவி பல்வேறு சீரியல்களிலும், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மே 23 ஆம் தேதி வைபவி தனது வருங்கால கணவருடன் இமாச்சல் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் வைபவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வருங்கால கணவரின் நிலை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்