Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

விஜய் டிவியில் முற்றிலும் புதுமையாக 'ரெடி ஸ்டெடி போ' சீசன் 3 வரப்போகிறது | Ready Steady Po Season 3

Priyanka Hochumin Updated:
விஜய் டிவியில் முற்றிலும் புதுமையாக 'ரெடி ஸ்டெடி போ' சீசன் 3 வரப்போகிறது | Ready Steady Po Season 3Representative Image.

தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'Ready Steady Po' நிகழ்ச்சி மீண்டும் விஜய் டிவியில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது.

டிஆர்பி-யில் சன் டிவிக்கு போட்டியாக இருக்கும் விஜய் டிவி மக்களை எண்டெர்டைன் செய்ய பல ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் 18 ஜூன் 2017 அன்று ரியோ ராஜ் மற்றும் ஆண்ட்ரூஸ் இருவரும் ஆங்கரிங் செய்த நிகழ்ச்சி 'ரெடி ஸ்டெடி போ' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை மொத்தம் 2 சீசன்களைக் கடந்த இந்த நிகழ்ச்சி மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. 11 ஜூன் 2023 முதல் வரும் ஒவ்வொரு ஞாயிறும் விஜய் டிவியில் மதியம் 1.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த முறை பாக்கியலட்சுமி தொடரில் நடித்த எழில் மற்றும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்ஷன் இருவரும் சேர்ந்து ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர்.

போட்டி நடைபெறும் வழிமுறை

மாடலிங் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் 3 உறுப்பினர்கள் [இளம் பெண்கள்] கொண்ட இரண்டு அணிகள் மோதிக்கொள்வார்கள். மொத்தம் 1.30 மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 3 சுற்றுக்கள் நடைபெறும். அதில் இரண்டு அணிகளில் இருந்து ஒருவர் வந்து போட்டியிடுவார்கள். எந்த அணி அதிக முறை வெற்றி பெறுகிறதோ அவர்களே வெற்றியாளர். ஆனால் இந்த நிகழ்ச்சியின் சிறப்பே தோல்வியுற்ற அணிக்கு கிடைக்கும் சவால்கள் தான். இப்படி சிரிப்பிற்கு, நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியை வாராவாரம் தொடர்ந்து பார்த்து மகிழ்ச்சியடையுங்கள்.

ரெடி ஸ்டெடி போ இன்றைய எபிசொட்

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை பார்த்து மகிழ இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

ரெடி ஸ்டெடி போ ப்ரோமோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்