Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

KPY தீனாவுக்கு திருமணம்... பொண்ணு யாரு தெரியுமா? | KPY Dheena Marriage Photos

Nandhinipriya Ganeshan Updated:
KPY தீனாவுக்கு திருமணம்... பொண்ணு யாரு தெரியுமா? | KPY Dheena Marriage PhotosRepresentative Image.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தீனா. அதில் சரத் உடன் சேர்ந்து இவர் செய்த காமெடி கலாட்டா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்பெஷல் ஷோக்களில் கலந்துகொள்ள வரும் பிரபலங்களுக்கு போனில் அழைத்து அவர்களை சரமாரியாக கலாய்த்து தள்ளி வந்தார் தீனா. அவரின் டைமிங் காமெடி வேறலெவலில் ரீச் ஆனது. இது தவிர தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, தீனாவுக்கு திருப்புமுனையாக கைதி படம் அமைந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் படம் முழுக்க கார்த்தியுடனே பயணிக்கும் கேரக்டரில் நடித்திருந்தார் தீனா.  

KPY தீனாவுக்கு திருமணம்... பொண்ணு யாரு தெரியுமா? | KPY Dheena Marriage PhotosRepresentative Image

கைதி படத்துக்கு பின்னர் மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற தீனா, மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்து அசத்தினார். மாஸ்டர் படத்துக்கு பின்னர் சினிமாவில் தீனாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் படிப்படியாக வளர்ந்து வந்த தீனா, சமீபத்தில் தன் சொந்த ஊரில் மூன்று அடுக்கில் பிரம்மாண்டமான மாடி வீடு கட்டி பால்காய்ச்சினார். அதன் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

KPY தீனாவுக்கு திருமணம்... பொண்ணு யாரு தெரியுமா? | KPY Dheena Marriage PhotosRepresentative Image

இந்நிலையில், புது வீடு கட்டிய கையோடு நடிகர் தீனாவுக்கு திருமணமும் நடந்து முடிந்துள்ளது. கிராபிக் டிசைனரான பிரகதி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாம். இவர்களது திருமணத்தில் கலக்கப்போவது யாரு சரத் உள்பட ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். தற்போது தீனாவின் திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்