Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஞ்சலி 50 - ஈகை படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

Aruvi Updated:
அஞ்சலி 50 - ஈகை படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதுRepresentative Image.

சென்னை: நடிகை அஞ்சலியின் 50 படமான ஈகை படத்தின் பூஜை இன்று போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கியது.

கற்றது தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கி ஜீவா நடித்திருந்த அந்தப் படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு க்ளாசிக்காக இருந்ததை அடுத்து முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிகை என்ற பெயரைப் பெற்றார் அஞ்சலி.

அஞ்சலி 50 - ஈகை படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதுRepresentative Image

இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன. அதன்படி அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்புசேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக்கொண்டே சென்ற அஞ்சலி மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றார். மேலும் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டார்.

அஞ்சலி நடித்த படங்களில் தன்னுடைய கேரக்ட்ரை எப்போதும் பேச வைத்துவிடுவார். குறிப்பாக கற்றது தமிழ் படத்தில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நிஜமாதான் சொல்றியா என அவர் கேட்கும் இடத்தில் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கிறங்கிப்போயினர். கற்றது தமிழில் தனது நடிப்பை நிரூபித்த அஞ்சலிக்கு அடுத்த முக்கியமான படம் அங்காடித் தெரு. கனி என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். குறும்பான பெண்ணாக படத்தில் வலம் வரும் அஞ்சலி ஒரு சங்கடமான சூழ்நிலையை ஹீரோவிடம் சொல்லும்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நடிப்பார் கலங்கடித்திருப்பார்.

அஞ்சலி 50 - ஈகை படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதுRepresentative Image

இப்படி பல படங்களில் தன்னுடைய நடிப்பில் ஸ்கோர் செய்த அஞ்சலி தெலுங்குக்கும் சென்றார். ஆனால் திடீரென அவரை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. இதன் காரணமாக தமிழ் சினிமாவிலிருந்து சில காலம் காணாமல் போனார். அதனையடுத்து சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரீ என்ட்ரி கொடுத்த அஞ்சலி அடுத்ததாக ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் உள்ளிட்ட படத்தில் நடித்தார். இருப்பினும் அவருக்கு பழையபடி வாய்ப்புகள் சரளமாக கிடைக்கவில்லை

கடைசியாக ஹாட்ஸ்டாரில் வெளியான ஃபால் என்ற வெப் சீரிஸில் நடித்த அவர் இப்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை நடித்திருக்கிறார். கற்றது தமிழ் படம் மூலம் எப்படி தன்னை மிகச்சிறந்த நடிகையாக அடையாளப்படுத்தினாரோ அதேபோல் ஏழு கடல் ஏழு மலை படமும் தனக்கு மிகச்சிறந்த அடையாளத்தை பெற்றுக்கொடுக்கும். இதன் மூலம் அடுத்த ரவுண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் அஞ்சலி இருக்கிறார்.

அஞ்சலி 50 - ஈகை படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதுRepresentative Image

இந்தச் சூழலில் அஞ்சலி தனது 50ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்துக்கு ஈகை என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் பாரதிராஜா , புஷ்பா பட வில்லன் சுனில் ,இளவரசுபுகழ் , அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா,நிஷாந்த் ரகு , கிருஷ்ண சந்தர்காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.சில நாட்களுக்கு முன்பு வெளியான அறிவிப்பில் ஜூன் 22ஆம் தேதி படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. இவ்விழாவில் பாரதிராஜா உள்ளிட்டோ கலந்துகொண்டனர். இப்படத்துக்கு தரண் இசையமைக்க ஸ்ரீதர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். பிரவீன் கே.எல் எடிட்டராகவும் ராமலிங்கம் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். அதேபோல் விவேகாவும், அறிவும் பாடல்களை எழுதுகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்