Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆடையின்றி நடிப்பேன்... பகீர் கிளப்பிய நடிகை!

UDHAYA KUMAR Updated:
ஆடையின்றி நடிப்பேன்... பகீர் கிளப்பிய நடிகை!Representative Image.

ஆடையின்றி நிர்வாணமாக நடிக்கத் தயாராக இருப்பதாகவும், கதைக்கு தேவைப்பட்டால் அப்படி நடிக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் நடிகை பிந்து மாதவி தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

வெப்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிந்து மாதவி.  கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார். தேசிங்கு ராஜா படத்தின் மூலம் பலருக்கும் பிடித்த நடிகையாக மாறிப்போனார். 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார் பிந்து மாதவி. அங்கு பிந்துவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானார் பிந்து மாதவி. பின்னர் தெலுங்கு பிக்பாஸிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பிந்து மாதவியிடம் சமீபத்தில் கேட்கப்பட்ட பேட்டி ஒன்றில் நடிகைகள் நிர்வாணமாக நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு படவாய்ப்புக்காக யாரும் நிர்வாணமாக நடிப்பதில்லை. கதைக்கு தேவைப்பட்டால் அப்படி நடிப்பதில் தவறு இல்லை. நானும் தயாராக இருக்கிறேன் என்று கூறினார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்