Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இப்படி காமிச்சா எப்படி நாங்க தூங்குறது... குமுறும் நெட்டிசன்கள்!

UDHAYA KUMAR Updated:
இப்படி காமிச்சா எப்படி நாங்க தூங்குறது... குமுறும் நெட்டிசன்கள்!Representative Image.

நடிகை தன்யா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்த்தவர்கள் இப்படி கமெண்ட் செய்து வருகிறார்கள். இம்முறை இலைமறை காயாக கொஞ்சம் கிளாமரே காட்டியிருக்கிறார் தன்யா. 

தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான தன்யா, நெஞ்சுக்கு நீதி, பலே வெள்ளயத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.  இவர் மலேசிய தமிழ் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார்.  தாத்தாவைப் பார்த்து சினிமாவில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர், தாயாரை பார்த்து நடனம் கற்றுக் கொண்டுள்ளார். 

தன்யாவின் தாயார் லாவண்யா ஒரு பாரம்பரிய நடனக் கலைஞர்.  தன்யாவும் சரி அவரது சகோதரி அபரஜிதாவும் சரி பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்று திறமையை வளர்த்துக் கொண்டனர். கடந்த 2016ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில்  மைத்ரேயாவுக்கு ஜோடியாக நடிக்க ஆடிசனில் வெற்றி பெற்றார் தன்யா. 

பலே வெள்ளயத்தேவா படத்தில் சசிக் குமார் ஜோடியாக அறிமுகமான இவர், அதன் பிறகு அருள் நிதி ஜோடியாக பிருந்தாவனம் படத்திலும் நடித்தார். இது ஊட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு காமெடித் திரைப்படமாகும். 

பின்னர் விஜய் சேதுபதியுடன் இணைந்து கருப்பன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடலின் மூலமே இவர் பலருக்கும் அறிமுகமானார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

இப்படி காமிச்சா எப்படி நாங்க தூங்குறது... குமுறும் நெட்டிசன்கள்!Representative Image

அழகிய தன்யா!

இப்படி காமிச்சா எப்படி நாங்க தூங்குறது... குமுறும் நெட்டிசன்கள்!Representative Image

அழகிய தன்யா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்