Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்த சமந்தா.. அணைத்தபடி கொடுத்த போஸை பாருங்க..

Aruvi Updated:
சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்த சமந்தா.. அணைத்தபடி கொடுத்த போஸை பாருங்க..Representative Image.

சென்னை: சினிமாவிலிருந்து ஓய்வெடுத்திருக்கும் சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகியுள்ளது.

சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அங்கு நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைத்னயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நல்லபடியாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 

திருமண வாழ்க்கை முறிவுக்கு பிறகு சமந்தா கோலிவுட், ஹாலிவுட் என றெக்கை கட்டி பறந்தார். நடிப்பு மட்டுமின்றி புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமாவுக்கு நடனமும் ஆடினார். இதனால் அவரது கரியர் கிராஃப் உச்சம் சென்றது. இப்படி அவரது கரியரின் கிராஃப் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. 

நோயிலிருந்து மீண்டிருக்கும் சமந்தா மீண்டும் முழு வேகத்தில் படங்களில் கமிட்டானார். அந்தவகையில் அவர் நடித்த சாகுந்தலம் படம் அண்மையில் ரிலீஸாகி படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படமானது செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகவுள்ளது. 

இதற்கிடையே அண்மையில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதன் இந்திய வெர்ஷனில் ப்ரியங்கா சோப்ரா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க கமிட்டானார். அதற்கான ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த வெப் சீரிஸை அதனை ராஜ்& டிகே இயக்குகின்றனர். சமந்தாவுடன் வருண் தவான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்த சமந்தா.. அணைத்தபடி கொடுத்த போஸை பாருங்க..Representative Image

இந்தச் சூழலில் சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து; கமிட்டான படங்களுக்கான அட்வான்ஸையும் திருப்பி கொடுத்துவிட்டார். தனது உடல்நலத்தில் கவனம் செலுத்துவதற்காகத்தான் சமந்தா இந்த ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார். சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் சமந்தா சமீபத்தில் கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். ஈஷா யோகா மையத்தில் அவர் தியானம் செய்யும் புகைப்படம் இன்றுகூட வெளியாகி ட்ரெண்டானது. 

இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை பதிவேற்றியிருக்கிறார். அதில் ஒரு பூனைக்குட்டியுடன் இருக்கிறார் அவர். அந்தப் பூனைக்குட்டிக்கு கெலட்டோ என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.  அந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்