Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அப்டேட் மேல் அப்டேட்....தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி...இப்ப என்ன அப்டேட் வந்திருக்கு தெரியுமா..?

madhankumar July 13, 2022 & 18:27 [IST]
அப்டேட் மேல் அப்டேட்....தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி...இப்ப என்ன அப்டேட் வந்திருக்கு தெரியுமா..?Representative Image.

நடிகர் தனுஷ் ரசிகர்கள் தான் கோலிவுட் வட்டாரத்திலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றே கூறலாம். காரணம் அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் வரிசையாக வந்தவண்ணம் உள்ளன.

தி கிரே மேன்:

தனுஷ் தற்போது ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் ஹாலிவுட் நடிகர்கள் கிறிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள "தி கிரே மேன்" படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளுக்காக அமெரிக்காவில் உள்ளார். மேலும் படக்குழுவினருடன் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் ரியான் கோஸ்லிங், அனா டி அர்மாஸ் ஆகியோருடன் சண்டையிடும் காட்சிகள் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது, இதனை பார்த்த ரசிகர்கள் ஆஹா ஓஹோ என தனுஷை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிக்காக படத்தின் இயக்குனர்கள் ஜோ ரூசோ ஆண்டனி ரூசோ ஆகியோர் இந்தியா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படமானது வரும் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் 15 ஆம் தேதி குறிப்பிட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. 

திருச்சிற்றம்பலம்:

இதனையடுத்து நடிகர் தனுஷ் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் "திருச்சிற்றம்பலம்" படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் இந்த படத்தின் முதல் பாடலான "தாய்க்கிழவி" யூடியூபில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது பாடலான "மேகம் கருக்காத" என்ற பாடல் ஜூலை 15 ஆம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. 

நானே வருவேன்:

இதனையடுத்து நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் "நானே வருவேன்"  'வி கிரியேஷன்' சார்பாக கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை  தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜ இசையமைத்துள்ள இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் செல்வராகவனும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு தான் டப்பிங் செய்வது போல் புதிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் செல்வராகவன். 

இதுமட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் "வாத்தி" படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் பஸ்ட் லுக் அல்லது வேறு ஏதேனும் அப்டேட் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 அன்று வெளியாகலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்