Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rowdy Baby: ரவுடி பேபி Returns...தனுஷ்-ன் வுண்டர்பார் யூடியூப் சேனல் மீட்பு..!

madhankumar May 18, 2022 & 11:35 [IST]
Rowdy Baby: ரவுடி பேபி Returns...தனுஷ்-ன் வுண்டர்பார் யூடியூப் சேனல் மீட்பு..!Representative Image.

நடிகர் தனுஷின் வுண்டர்பார் யூடியூப் சேனல் நேற்று மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்ற தகவல் வந்ததில் இருந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். தற்போது அந்த சேனல் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் வுண்டர்பார் என்னும் பட தயாரிப்பு நிறுவனத்தை  தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் 3, வேலையில்லா பட்டதாரி, காலா, நானும் ரவுடிதான், விஐபி 2, காக்கி சட்டை, காகா முட்டை, பா.பாண்டி, தங்கமகன் மாரி, மாரி 2 உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இதில் பெரும்பாலான படங்கள் வெற்றியடைந்தன. 

இந்நிலையில் நேற்று இந்த நிறுவனத்தின் யூடியூப் சேனை மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது அந்த நிறுவனத்திற்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வுண்டர்பார் நிறுவனம், யூடியூப் நிறுவனத்தின் உதவிய நாடி சேனலை மீட்கும் பணியில் களமிறங்கியது.

இதற்கிடையே ட்விட்டரில் #rowdybaby ஹாஸ்டாக் ட்ரெண்ட் ஆக ஆரமித்தது, காரணம் வுண்டர்பார் யூடியூப் சேனலில் மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலின் வீடியோ இருந்தது, இந்த பாடல் தென்னிந்திய சினிமாவிலே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றிருந்தது. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை 136 கோடி (1.36 BILLION) பார்வையாளர்களுடன் இந்த பாடல் மிக பிரபலமடைந்திருந்தது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுவிட்டதால் அந்த பாடல் அழிந்துவிடும், என்ற செய்திகள் பரவ தொடங்கின.

இந்நிலையில் இன்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக வுண்டர்பார் யூடியூப் சேனல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரவுடி பேபி பாடல் சேனலில் இருந்து நீக்கப்படாமல் அப்படியே உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் அனைவரும் மீண்டும் பட தயாரிப்பு வேளைகளில் ஈடுபடும் படி அந்த நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்