Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் அரசியலுக்கு வருகிறாரா?.. லோகேஷ் கனகராஜ் சொன்ன பதிலை கேளுங்க!

Aruvi Updated:
விஜய் அரசியலுக்கு வருகிறாரா?.. லோகேஷ் கனகராஜ் சொன்ன பதிலை கேளுங்க!Representative Image.

சென்னை: விஜய் அரசியலுக்கு வருகிறாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிவடைந்துவிட்டதாக சமீபத்தில்தான் இயக்குநர் லோகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லியோவில் நடித்துகொண்டிருந்தபோதே தனது 68ஆவது படத்தில் கமிட்டானார் விஜய். அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க; வெங்கட் பிரபு இசையமைக்கிறார். முதன்முறையாக விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் அந்தப் படத்துக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பித்து மும்முரமாக நடந்துவருகிறது.

தனது மக்கள் இயக்கத்தினரை வைத்து கடந்த பல வருடங்களாகவே நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார் விஜய். ஆனால் சமீப காலமாக தானே நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார். அதன்படி 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மூன்று பேரை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தார்.

அதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையும் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரது இந்த செயல்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அதற்கான விதையைத்தான் இப்போது தீவிரமாக விதைத்துக்கொண்டிருக்கிறார் என்கின்றனர் பலர். 

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் விஜய் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,  “இதற்கான பதிலை அரசியல் தெரிந்தவர்கள் சொன்னால் சரியாக இருக்கும். எனக்கு அரசியல் தெரியாது. அதனால் இந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது” என்றார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்