Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிம்பு - ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் அடுத்த ஃபயர்... | Pathu Thala Namma Satham

Nandhinipriya Ganeshan Updated:
சிம்பு - ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் அடுத்த ஃபயர்... | Pathu Thala Namma SathamRepresentative Image.

மாநாடு, வெந்து தணிந்து காடு படங்களை தொடர்ந்து சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தில் சிம்புவுடன் கலையரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. இதனால், தமிழிலும் மாஸ் ஹிட் அடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. 

சிம்பு - ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் அடுத்த ஃபயர்... | Pathu Thala Namma SathamRepresentative Image

நவம்பரில் முடிவுக்கு வந்த பத்து தல ஷீட்டிங் டிசம்பர் மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டு மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை [பிப்‌.3 அன்று மதியம் 12:07 மணிக்கு] வெளியாகவுள்ளது. 

அந்தவகையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிளின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் கறுப்பு வேஷ்டி, சட்டையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு. மேலும், விவேக் எழுதிய "நம்ம சத்தம்" பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த கோம்போ தான் நம்ம சத்தம் பாடலின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்