Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாமன்னனுக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் மனு.. திரையுலகில் பரபரப்பு

Aruvi Updated:
மாமன்னனுக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் மனு.. திரையுலகில் பரபரப்புRepresentative Image.

சென்னை: மாமன்னன் படத்தை தடை செய்ய வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமாவை கற்றுக்கொண்டு தனது அனுபவத்தை கலந்து சினிமா செய்பவர் மாரி செல்வராஜ். அவர் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாளில் அவரது ஒட்டுமொத்த வலியையும் ரசிகர்கள் உணரும்படி காட்சிகளை அமைத்திருந்தார். அதேபோல் அவரது இரண்டாவது படமான கர்ணனிலும் ரசிகர்களுக்கு ஒரு வலியை கடத்தினார். அந்த இரண்டு படங்களின் மூலமே மாரி செல்வராஜ் தமிழின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
இதனையடுத்து அவர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் கதை என்னவாக இருக்கும் என பலரும் யோசித்திருந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்பு மாரி செல்வராஜ் அளித்த பேட்டியில் படம் மேற்கு மாவட்ட அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய மாரி செல்வராஜ் தேவர் மகனில் வரும் இசக்கி அதிகாரத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் மாமன்னன் கதை என கூறி சர்ப்ரைஸ் கொடுத்தார். தேவர் மகனில் இசக்கி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது வடிவேலு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், அமைச்சருமான உதயநிதி இந்தப் படம்தான் எனது கடைசி படம் என தெரிவித்துவிட்டு மீண்டும் நடித்தால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பேன் என உறுதியளித்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மாமன்னன் படத்தை தடை செய்ய வேண்டும் என ஓஎஸ்டி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தில் உரிமையாளர் ராம சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், “கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத் , யோகிபாபு நடிக்க ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி 80 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டன.
20 சதவிகித படப்பிடிப்பு இன்னும் நடத்த வேண்டிய சூழல் இருக்கிறது. ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி அந்தப் படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.ஒப்பந்தப்படி இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் அவர் இழுத்தடிக்கிறார். எனவே ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் நிறைவு செய்து தர வேண்டும். அதுமட்டுமின்றி ரூ.25 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும்என குறிப்பிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்