Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னை SPI சத்தியம் தியேட்டர் - டிக்கெட் விலை, முகவரி, ஆன்லைன் புக்கிங் | PVR SPI Sathyam Cinemas Location

Gowthami Subramani Updated:
சென்னை SPI சத்தியம் தியேட்டர் - டிக்கெட் விலை, முகவரி, ஆன்லைன் புக்கிங் | PVR SPI Sathyam Cinemas LocationRepresentative Image.

பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவதில் முக்கிய பங்கு வகிப்பது திரையரங்குகள் ஆகும். பொதுமக்கள் பெரும்பாலும், வீட்டில் படம் பார்ப்பதை விட, திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பதையே விரும்புவர். அதிலும், பிரபலங்களின் ரசிகர்கள் அவர்களது புதிய திரைப்படம் வெளியீடு ஆக இருப்பின், ரசிகர்கள் ஆரவாரத்துடன் காணப்படுவர். அதே நேரத்தில், திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் முன்னதாகவே ஆன்லைனில் வெளியீடு செய்யப்பட்டாலும், மக்கள் திரையரங்குகளில் காணவே விரும்புகின்றனர்.

ஆன்லைன் புக்கிங் வசதி

பயனர்களுக்கு உதவும் வகையில் திரையரங்குகளும் பல்வேறு அம்சங்களைத் தரும் வகையில் அமைகின்றன. அந்த வகையில் பயனர்களுக்கு ஏற்றவாறு படம் ரிலீஸ் ஆகும் முன்னதாகவே, ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது அமையும். அவ்வாறு, 1 வாரத்திற்கு முன்னதாகவே திரையரங்குகளில் படத்தைக் காண புக் செய்து விடுவர். திரையரங்குகளில் படம் பார்க்க நினைப்பவர்களுக்கு ஏதுவாகவே, இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயனர்கள் AC, Non-AC உள்ளிட்ட வசதிகளிலும் திரைப்படம் காணலாம்.

PVR சினிமாஸ் தியேட்டர்

இவ்வாறான, திரைப்படம் காண்பதற்கு ஏற்ற வசதியைத் தரும் திரையரங்குகளில் ஒன்றே PVR சினிமா தியேட்டர் ஆகும். இந்தியா மற்றும் இலங்கையில் மொத்தம் 115 நகரங்களில் 1689 திரைகளுடன் இந்த தியேட்டர் உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பிரீமியம் திரைப்படக் காட்சியகமான PVR INOX- ஆகும். இது பயனர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் வகையிலும், அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் பிரீமியம் வடிவங்கள், வசதியான இருக்கை, ஒலி அம்சங்கள், ப்ரொஜக்ஷன், திரைப்படம் பார்ப்பதற்கான சூழல், உணவு மற்றும் பானங்கள் அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த PVR Cinemas-ல் கிடைக்கப் பெறுகிறது.

வித்தியாசமான திரைகள்

இதன் திரையரங்குகளில் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து வகையான மொழிகளின் திரைப்படங்களும் இடம் பெறுகிறது. இதன் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம், திரைப்படத்தைப் பார்ப்பது மட்டுமல்லாமல், அதன் கதையில் நாம் இருப்பது போல அனுபவத்தைத் தருகிறது. மேலும், இந்த திரையரங்கம் PVR DIRECTOR'S CUT, PVR PICTURES, PVR ICE, PVR IMAX, PVR 4DX, PLAYHOUSE, PVR GOLD, PVR LUXE, PVR P[XL], PVR ONYX, PVR NEST, V PRISTINE போன்ற பல்வேறு வித்தியாசமான திரைகளைக் கொண்டு அமையப் பெறுகிறது.

தமிழகத்தில் பிவிஆர்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிவிஆர் சினிமாக்கள் அமையப் பெற்று மக்களுக்கு புதுவித அனுபவத்தைத் தந்து வருகின்றன. அதிலும், முக்கியமாக சென்னையில் நிறைய இடங்களில் பிவிஆர் சினிமா தியேட்டர்களை நாம் காணமுடியும். அந்த வகையில், சென்னையில் உள்ள PVR SPI Sathyam தியேட்டர் ஆன்லைன் புக்கிங், திரையிடப்படும் படங்களின் விவரங்கள், மற்றும் இன்னும் சில முக்கிய தகவல்களைக் காணலாம்.

PVR SPI Sathyam Cinemas Chennai Location

8, திருவிகா சாலை,

பீட்டர்ஸ் காலனி,

ராயப்பேட்டை,

சென்னை,

தமிழ்நாடு – 600014

ஆன்லைன் புக்கிங்

மற்ற திரையரங்குகளைக் காட்டிலும், PVR சினிமா தியேட்டரில் விலை கூடுதலாகவே இருக்கும். மற்ற திரையரங்குகளை விட, இந்த பிவிஆர் திரையரங்குகள் அதற்கு ஏற்றாற்போல வசதிகளை அளித்து வருகிறது. இருப்பினும், ஆன்லைன் புக்கிங் செய்வதன் மூலம் கிஃப்ட் கார்டு, ஆஃபர், கூப்பன் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி விலையைக் குறைத்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் உள்ள PVR சினிமாஸ் தியேட்டர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைக் க்ளிக் செய்யவும்.

PVR Cinemas

சென்னை PVR SPI Sathyam தியேட்டரில் ஆன்லைன் புக்கிங் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைக் க்ளிக் செய்யவும்.

Book Tickets


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்