Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

படத்தின் தலைப்பை மாற்றிய சசிகுமார்....எந்த படத்திற்கு தெரியுமா..?

madhankumar July 27, 2022 & 18:55 [IST]
படத்தின் தலைப்பை மாற்றிய சசிகுமார்....எந்த படத்திற்கு தெரியுமா..?Representative Image.

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் 'காமன் மேன்' என்ற படத்தில் நடித்து வந்தார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. 

இந்நிலையில் 'காமன் மேன்' என்ற தலைப்பின் உரிமை எங்களிடம் உள்ளது என்று ஏ.ஜி.ஆர் ரைஸ்ட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது. இயக்குனர் சுசீந்திரனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே 'காமன் மேன்' என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட ஜாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது என எம்.ஜி.ஆர் ரைட்ஸ் பிலிம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்சார் போர்ட் காமன் மென் என்ற தலைப்பிற்கான உரிமையை எம்.ஜி.ஆர். ரைட்ஸ் பிலிம் நிறுவனத்திற்கு முழுமையாக கொடுத்துள்ளது. இதனால் சசிகுமார் படத்திற்கு சிக்கல் எழுந்தது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை படக்குழு தற்போது மாற்றியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு வைக்கப்பட்ட காமன் மேன் என்ற பெயரை மாற்றி நான் மிருகமாய் மாற என்று புதிய தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்