Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

நெருக்கமான காட்சிகளில் நான் சௌகரியமாக உணர்ந்தேன் - தமன்னா!

Aruvi Updated:
நெருக்கமான காட்சிகளில் நான் சௌகரியமாக உணர்ந்தேன் - தமன்னா!Representative Image.

மும்பை: ஜீ கர்தா வெப் சீரிஸில் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது நடிகர் சுஹைல் என்னை சௌகரியமாக உணர செய்ததாக தமன்னா பேசியிருக்கிறார்.

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா.

இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார்.  இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் அவரை பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. அதேபோல்  தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன் படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகிறது.

தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்ற கருத்து பரவலான எழுந்த சூழலில் அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார். ரஜினிகாந்த்தை வைத்து அவர் இயக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்திருக்கிறார். அதேபோல் சுந்தர் சி இயக்கும் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்திலும் தமன்னா கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் லஸ்ட் ஸ்டோரி 2வில் நடித்தபோது விஜய் வர்மாவுக்கும், தமன்னாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோதுதான் எனக்கும் விஜய் வர்மாவுக்கும் காதல் மலர்ந்தது. நான் எதிர்பார்த்த நபர் போலவே அவர் இருந்தார். உடன் நடிக்கும் நடிகரை காதலிப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை’ என கூறி தனது காதலை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஜீ கர்தா வெப் சீரிஸில் தமன்னா க்ளாமராகவும், நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருந்தார். அதில் அவர் லாவண்யா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். இந்நிலையில் ஜீ கர்தா வெப் சீரிஸில் நெருக்கமாக நடித்தது குறித்து பேட்டி அளித்த அவர், “லாவண்யாவுக்கும், ரிஷப் கதாபாத்திரத்திற்கும் இடையேயான பயணத்தை விவரிக்க அந்த மாதிரி காட்சிகள் மிகவும் முக்கியம். ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்தக் காட்சிகளை சும்மா வைக்கவில்லை.

ரிலேஷன்ஷிப் சம்பந்தமான டிராமாவில் இதுபோன்ற நெருக்கமான காட்சிகள் எல்லாம் முக்கியமானவைதான். மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அப்படித்தான் இருக்கும். நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது சுஹைல் என்னை சௌகரியமாக உணர செய்தார். அந்தக் கதாபாத்திரமாக எனக்கு பிரச்னை இல்லை” என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்