Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிறந்த நடிகருக்கான விருதை தட்டித்தூக்கிய தளபதி விஜய்.. | Osaka Awards 2023 Best Actor

Nandhinipriya Ganeshan Updated:
சிறந்த நடிகருக்கான விருதை தட்டித்தூக்கிய தளபதி விஜய்.. | Osaka Awards 2023 Best ActorRepresentative Image.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. இப்படம் முடியும் தருவாயில் உள்ள நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், லியோ படத்திற்கு பிறகு விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வேளையில், நேற்று தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியானது. 

தளபதி விஜய் தன்னுடைய தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் தான் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் செம்ம குஷியில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸும் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகர் விஜய்க்கு ஜப்பானியில் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜப்பான் நாட்டின் சார்பாக சர்வதேச அளவில் விருது வழங்கும் விழா நடைபெறும். அதன்படி, ஒசாகா தமிழ் தேசிய விருது விழா 2021 ஆண்டு வெளியான படங்களுக்கு பல்வேறு பட்டியல்களின் அடிப்படையில் விருதுகள் வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2021ஆம் ஆண்டு ரிலீஸான மாஸ்டர் படத்திற்காக நடிகர் விஜய்க்கு ஒசாகா திரைப்பட விழாவில் சிறந்த நடிகரான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்