Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

காதல் டூ கல்யாணம்.. தெலுங்கு பிரபலங்களுக்கு விரைவில் திருமணம்.! | Varun Tej and Lavanya Tripathi Marriage

Gowthami Subramani Updated:
காதல் டூ கல்யாணம்.. தெலுங்கு பிரபலங்களுக்கு விரைவில் திருமணம்.! | Varun Tej and Lavanya Tripathi MarriageRepresentative Image.

தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வருண் தேஜ். இவர், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை லாவண்யா திரிபாதியைக் காதலிப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை நிச்சயம் நடைபெற்றது. இதில், பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

திரையுலகில் என்டர் ஆன பிறகு, பெரும்பாலும் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். ராதிகா – சரத்குமார், சினேகா – பிரசன்னா, சூர்யா – ஜோதிகா, நயன்தாரா- விக்னேஷ் சிவன், ஆதி – நிக்கி கல்ராணி போன்றோர் தனது காதல் வாழ்க்கையைத் திருமணத்திற்குக் கொண்டு சென்றனர். அந்த வரிசையில், தற்போது புதிதாக இணைய உள்ள ஜோடி லாவண்யா திரிபாதி மற்றூம் வண் தேஜ் தம்பதியினர்.

வருண் தேஜ் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினர் ஆவார். பிரபல நடிகரும், சிரஞ்சீவியின் தம்பியுமான நாகபாபுவின் மகன் வருண் தேஜ் ஆவார். லாவண்யா திரிபாதி தெலுங்கில் நாகர்ஜூனா, ரம்யா கிருஷ்ணா உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். மேலும், தமிழில் சசிகுமாரின் “பிரம்மன்” திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து “மாயவன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது, இவர் அதர்வா ஜோடியாக “தணல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அந்தாரிக்ஷம் என்ற திரைப்படத்தில் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி ஒன்றாக நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடித்த போது இவர்கள் இருவரும் காதலில் விழுந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இதை லாவண்யா மறுத்திருந்தார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வருண் தேஜ் தனது நீண்ட நாள் காதலியான நடிகை லாவண்யா திரிபாதி உடன் நேற்று முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம், இந்த ஆண்டு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த நிச்சயதார்த்தத்தில் பிரபல நடிகர்களான அல்லு அர்ஜூன், ராம் சரண் மற்றும் ராம் சரண் மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா உள்ளிட்டோரும் பங்கு பெற்று விழாவை சிறப்பித்துள்ளனர். நீண்ட நாள்களாக, ரசிகர்களுக்கு குழப்பத்தைத் தந்த இந்த ஜோடி தற்போது திருமணம் நடந்து கொள்வதை அடுத்து ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்