Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாநிலங்களவை தேர்தல் முடிவுகள்....வெற்றி பெற்றவர்கள் யார் யார்?

madhankumar June 11, 2022 & 09:53 [IST]
மாநிலங்களவை தேர்தல் முடிவுகள்....வெற்றி பெற்றவர்கள் யார் யார்?Representative Image.

இந்தியா முழுவதும் காலியாக இருந்த 57 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நேற்று ஜூன் 10 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கர்நாடகா, மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த தேர்தலில் ஏற்கனவே தமிழ்நாடு, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, மத்திய பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கார், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் இருந்து 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மீதமுள்ள கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு  நடைபெற்றது.

இந்த தேர்தலில் கர்நாடகா மொத்தமுள்ள 4 இடங்களில் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் சிரோயா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 4 இடங்களில் காங்கிரஸ் 3 இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 

அரியானா மானிலத்தில் பாஜக வேட்பாளர் கிஷன்லால் பன்வார் மற்றும் பாஜக-ஜே.ஜே.பி. ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 6 இடங்களில் 3 இடங்களில் பாஜகவும், சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்ச பியூஸ் கோயல் வெற்றி பெற்றுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்