Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் | ITR Filing Last Day Today

Priyanka Hochumin Updated:
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் | ITR Filing Last Day TodayRepresentative Image.

2022 - 23 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய (ஜூலை 31, 2023) இன்று தான் கடைசி நாள்.

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்யும் செயல்பாடு நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் கடைசி நாள் வரை தாக்கல் செய்யாமல் இருப்பது மக்களின் அலட்சியத்தை தெரிய படுத்துகிறது. நாடு முழுவதும் நேற்று மாலை வரையில் 6 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர். இதில் நேற்று ஒரு நாள் மட்டும் 26 லட்சத்து 76 ஆயிரம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யபட்டதாக வருமான வரி துறையினர் அறிவித்துள்ளனர்.

சரி, ஒரு வேளை இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யா விட்டால் என்ன ஆகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கான பதில் இதோ! இன்று செய்ய முடியாதவர்கள் நாளை [ஆகஸ்ட் 1, 2023] முதல் டிசம்பர் 31, 2023 வரையில் தாராளமாக தாக்கல் செய்யலாம். ஆனால் அதற்கு தாமதக் கட்டணம் செலுத்தி தான் தாக்கல் செய்ய முடியும்.

அதாவது, 5 லட்சத்திற்கு மேல் வருமானம் வாங்குபவர்களாக இருந்தால் ரூ.5000/- மற்றும் அதற்கு கீழ் வருமானம் வாங்குபவர்களுக்கு ரூ.1000/- அபராதம் விதிக்கப்படும். அத்துடன் வருமான வரி சட்டத்தின் கீழ், தாமதமாக்கும் வருமான வரி தொகைக்கு மாதம் 1 சதவீத வட்டியை அபராதமாக செலுத்த வேண்டி வரும். எனவே, இன்றைக்கும் 2022 - 23 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்து விடுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்