Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரதமர் மோடி எகிப்து சுற்றுப்பயணம்: உயரிய விருது வழங்கி கவுரவிப்பு..!

Baskarans Updated:
பிரதமர் மோடி எகிப்து சுற்றுப்பயணம்: உயரிய விருது வழங்கி கவுரவிப்பு..!Representative Image.

கெய்ரோ: எகிப்து நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு 1000ஆண்டுகள் பழமை வாய்ந்த அல் ஹகீம் மசூதியைப் பார்வையிட்டார். மசூதியில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள், படங்கள் பார்வையிட்ட பிரதமருக்கு மசூதி நிர்வாகத்தினர் அவருக்கு நினைவு பரிசு வழங்கினர். இதை தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார். பிறகு ஹொலியாபொலிஸ் சென்ற பிரதமர், முதலாம் உலகப்போரில் வீரமரணம் அடைந்த 3,727 இந்திய வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்திய நேரப்படி காலை எகிப்து பிரதமர் முஸ்தபாவை சந்தித்த பிரதமர், இருநாட்டுகளுக்கு இடையேயான உறவுகள், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். பிறகு அந்நாட்டு தொழிலதிபர்களையும் சந்தித்து பேசினார்.  இதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அப்தெல் பத்தா அல் சிசியை சந்தித்தார். அப்போது இருவரும் கை குலுக்கு தங்களது அன்பை வெளிப்படுத்தினர். பிறகு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‛ஆர்டர் ஆப் தி நைல்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்நாட்டு அதிபர் அப்தெல் படா அல் சிசி வழங்கி மோடியை கவுரவப்படுத்தினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்