Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் மக்கள்..!

Nandhinipriya Ganeshan Updated:
மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் மக்கள்..!Representative Image.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

சென்ற வாரத்தில் இருந்து பல்வேறு நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, துருக்கி - சிரியாவில் தனது ஆட்டத்தை ஆரம்பித்த தொடர்ந்து சிக்கிம், நியூசிலாந்து என அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கர நிலநடுக்கதால் துருக்கி - சிரியாவில் மட்டும் உயிர் பல 15 ஆயிரத்தை கடந்துள்ளது. கடும் சேதத்தில் தவிக்கும் துருக்கி மக்களுக்கு பல்வேறு உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை நியூசிலாந்து வெலிங்டன் பகுதியில் இரவு 7.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது, நியூசிலாந்து நாட்டின் லோயர் ஹட் பகுதியில் இருந்து 78 கிலோ மீட்டர் தூரத்தில் 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கும் பதிவாகின. 

இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் இன்று அதிகாலை 2 மணியளவில் அந்நாட்டின் மஸ்பதே தீவை மையமாகக் கொண்டு நிடுநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இதனால், தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் கட்டிடங்கள் குலுங்கியதால், வீதிகளுக்கு தஞ்சமடைந்தனர். இதுவரை அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. ஆனால், இந்த நிலநடுகத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த பல நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்படுவதால், பீதியில் உறைந்துள்ளனர் பொதுமக்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்